காதல் தோல்வியின் வலி

அவளுக்கு மட்டும்
இந்த அரசியல்வாதிகளைப் போலதான்
அந்த ஆண்டவனும் போல

ஆமாம்
அந்த ஆண்டவனும்
கேட்பவர்களுக்கு எதையும் கொடுக்கமாட்டான்
ஆள்பார்த்துதான் கொடுக்கிறான்

நினைத்து வாழ ஒரு மணம்
மறந்து வாழ ஒரு மணம்
அன்று ஒருவன் கேட்டான்
அவனுக்கும் கொடுக்கவில்லை

இன்று நான் கேட்கிறேன்
எனக்கும் கொடுக்கவில்லை

ஆனால்
அவளுக்கு மட்டும் கொடுத்திருக்கிறானே..
என்னை நினைப்பதற்கு ஒரு மனதையும்
இப்போது
மறப்பதற்கு ஒரு மனதையும்..

எழுதியவர் : மதனரூபன் (5-Jun-15, 10:22 pm)
சேர்த்தது : Sinathurai Mathanaruban
பார்வை : 82

மேலே