முதலிலிருந்து
ஒரு சத்தம்.
திக்கு முக்காடினான்
ஆதாம்.
மீண்டும் அதே.
அதிசயித்து நின்றான்
ஆதாம்.
ஏவாளுக்கு
என்னவாயிற்று
என்ன மாயமிது?
நான்காவது முறை
தானும் அதே போல்
தலையசைத்தான்.
சத்தமில்லை..
மறுநாள்
ஆதாமிற்கும் வந்தது
இருமல்..
தொண்டையிலிருந்தும்
சத்தம் பிறக்குமென
கண்டறிந்த ஆதாம்
ஏவாளுக்கு முன் நின்று
செய்து காட்டினான்..
ஏவாளும்
லொக் என்றாள்.
ஆதாம் லொக் என்றே
பதில் சொன்னான்..
மழை பெய்யும்
பொழுதெல்லாம்
ஆதாமும் ஏவாளும்
லொக்கு லொக்கு என
பாடி திரிந்தார்கள்...
--கனா காண்பவன்

