மறந்து போனது

அன்றொரு நாள் ..
பேருந்தினுள் ..
ஏறி அமர்ந்ததும்,
உடனேயே அலுப்பினால்..
உறங்கிப் போனதும்
நடத்துனர் என்னை எழுப்பி
பயணச்சீட்டு கொடுத்ததும்
நினைவில் இருக்கிறது..
இன்று வரை..

நினைவில் நில்லாதது..
முன் இருக்கையில்..
மகளோடு அமர்ந்து..
புருஷனை விட்டு ..
விலகி வெகுதூரம்..
அவன் ..
கொடுமை விளக்கியபடி ..
பிழைப்புக்கு வேற்றூர் ..
சென்று கொண்டிருந்த
அந்தத் தாயின் முகம்!

பயணச்சீட்டு ..
நினைவில் நின்றாலும் ..
தொகை நினைவில் இல்லை ..!

பட்டுப் போனவளின் முகம் ..
மறந்து போனாலும் ..
அவள் துயரம்.
மறக்கவில்லை ..!

எழுதியவர் : கருணா (6-Jun-15, 3:37 pm)
Tanglish : maranthu ponathu
பார்வை : 72

மேலே