அதுவும் இதுவும்
அதுதானா இது..
இது அதுவேதானா ..
அன்றைக்கு ஆசைப் பட்டது..
இன்றைக்கு பிடிக்கவில்லை
இன்றைக்கு பிடிப்பது..
அன்றைக்கு கேலி செய்தது
அதுதானா இது..
இது அதுவேதானா ..
கூட்டல்..
கழித்தல்..
கூடுதல்..
களித்தல்..
எல்லாம் குகைமனிதனின்
வேட்டை குணங்களாய்
எப்போதும் சலிப்பின்றி..
அலைகள் ஓய்வதில்லை
என்றபடி ..அன்று..!
கூட்டின் பொருளும்
கழித்தலின் நிறைவும்
குகையினுள் மறைவதும்
எல்லாம் மாறுவதில்
இயக்கத்தின் விசை
அசைவின்றி நிற்பதும்
நிற்பது அசைவதும்
அரிதிலும் அரிது அரிது !
நேற்றின் எச்சமாய்..
இன்று ..!
இதன் மிச்சமாய் ..
நாளை எது?

