மூன்றெழுத்து
எல்லாருடைய வாழ்விலும்
முதல் மூன்றெழுத்து 'அம்மா' தான்....
என் முதல் கடவுளும் அம்மா தான்....
நான் பிறந்த போது
எனக்காக துடித்த ஜீவன்....
தன் ஆசைகளை தனக்குள்ளேயே புதைத்து
என் எதிர்காலத்திற்காக
இந்த நாள் வரை போராடுபவள்......
அவளின் சோகங்களை மனதிலேயே மறைத்து
என் ஆசைகளை நிறைவேற்றியவள்....
எனக்காக நான் கவலைப்பட்டதை விட
அதிகமாக கவலைப்படுகிறவள்.....
ஒரு வேளை உணவு உண்ணாவிட்டாலும்
உள்ளம் பதறுபவள்.....
உனக்காக நான் செய்தது என்னவோ....?
அடுத்த மூன்றெழுத்து
என் செல்ல 'அப்பா'...
எனக்கு பிடித்ததை என்னை கேட்காமலேயே
வாங்கி கொடுப்பவர்......
அன்பின் அமைதியை இவரிடமே
பார்க்க முடியும்....
அளவுக்கடங்காத பாசத்தை
அள்ளிகொடுப்பதில் அவருக்கு இணை இல்லை....
வளர்ந்தாலும் என்னை குழந்தை போல
பார்த்து கொள்பவர்....
உங்களுக்காக என்ன செய்ய போகிறேனோ....
இந்த மூன்றெழுத்து
உயிர்மூச்சுக்கு இணை-ஆம்
'நட்பு'..... தான்....
நாங்கள் இணைந்துவிட்டால்
சுதந்திர பறவைகள் தான்...
போட்டியும் பொறாமையும் இருந்தாலும்
புன்னகைக்க மறந்ததில்லை.....
நான் கழித்த பொழுதுகளில்
பொன்னான பொழுதுகள்
என் நண்பர்களோடு தான்.....
நண்பா......
திறமைகளை வெளிக்கொணர்வதிலும்
பிழைகளை திருத்துவதிலும்
உனக்கு நிகர் யாரும் இல்லை.....
தன் இன்பதுன்பங்களில் சரிபாதி கொள்பவனும்
அவன் இன்பதுன்பங்களில் சரிபாதி பெறுபவனும்
நண்பன் ஒருவனாக தான் இருக்க முடியும்........
இடைவெளிகள் இருந்தாலும்
இதயங்கள் இணைவது இங்கு மட்டுமே.....
நொடிமுள்ளுக்கும் பொறாமை தான்
எங்கள் இடைவிடாத பேச்சு, சிரிப்பின் மீது.....
எங்கள் நட்பு வெள்ளம்
கடலில் கலந்தாலும் வண்ணம் மாறாதது....
எதையும் எதிர்பார்த்து வருவதில்லை 'நட்பு....'
இந்த மூன்று மூன்றெழுத்தும்
இல்லாமல் வாழ்பவன் தான்....
உலகில் மிகவும் துர்அதிர்ஷ்டசாலி......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
