அந்தி நாடகம்

ஆடி நடந்திடுவாள் -அவள்
அசையும் கதிர்போலத் -தலை
மூடிய பூக்கண்டே-கதிர்
மொய்க்கும் குருவிகளும்
வாயைத் திறந்தனவாய்-தங்கள்
வசமிழந் தேதவிக்கும்!
சாயந் திரநேரம்- உழவு
சாத்தித் திரும்பிடுவான்
நேயப் பார்வையுடன்-எருதின்
நிமிர்ந்த திமில்தடவிப்
பாயில் விழும்நினைப்பில்-துள்ளிப்
பாய்பவன் போல்,நடப்பான்!
தோயும் இரவுவந்தே -திரை
தொங்க விடுத்திடுமே!

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (6-Jun-15, 8:16 pm)
பார்வை : 172

மேலே