நீ நின்ற நிமிடமொன்றில் - தேன்மொழியன்
நீ நின்ற நிமிடமொன்றில்
~~~~~~~~~~~~~~~~~~~~
தினம் திரட்டிய நினைவை ...ஏன்
உருட்டிக் கொண்டே வருகிறாய்
வெட்டி வீசிய விரல்நுனிக்குள்
செல்லின் விளிம்பாய் சிரிக்கிறாய் ..
ஆடையணிந்த அருவியென ...
சாரல் தெளித்து நகர்கிறாய் ...
தழுவுதலில் நழுவிய இதயமென
சுவாச அறைக்குள் சுழல்கிறாய்...
ரோமம் உதறிய தேகமாய்
தெய்வீக சுவடினுள் பதிகிறாய் ...
- தேன்மொழியன்