சொல்லத்தான் நினைக்கிறேன் காதலை 555

காதல்...
தினம் மேடு பள்ளம் நிறைந்த
கிழிந்த சாலையில்...
என்னை நீ கடந்து செல்லும்
போதெல்லாம்...
உன்னிடம் என் காதலை
சொல்லலாம் என்றும்...
காதல் கடிதம்
கொடுக்கலாம் என்றும்...
உன்னை எதிர்கொள்ளும்
போதெல்லாம்...
ஏதேனும் குறுக்கீட்டால்
வீடு திரும்புவேன்...
நாளை கொடுக்கலாம் என்று...
என் காதல் கடிதத்தில்
சரிவராத முடிவினை யோசிக்கையில்...
பல்லியின் சப்த்தம்தான்
அதிகம் என்னை தொடர்ந்தது...
என் காதலுக்கு தடங்கல்கள்
பல இருக்க...
ஒருநாள் இன்னொன்றாய்...
பக்கத்து வீட்டு அண்ணாவின்
காதல் தோல்வி மரணமும்...
என்று சொல்வேன்
உன்னிடம்...
என் காதலை.....