மதிப்பெண் ஹைபுன்

*
பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு, +2 வகுப்பு பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்கள்
செய்தி மகிழ்ச்சியளிக்கின்றது. பாராட்டலாம். இந்த தேர்ச்சி எப்படிப்பட்து என்புது தான் கேள்வி. மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்து, அதை அப்படியே பரிட்சையில் பதிவு செய்ய வைப்பது ஒரு தேர்வா? மனனம் செய்து எழுதியதை விடைத்தாள்கள் திருத்துபவர்கள் எப்படி முழுமையான சரியான விடையென்று மதிப்பெண் அளிக்கின்றார்கள்? அரசும் இதை எப்படி சரியானமுறையென்று அதிக மதிப்பெண் அள்ளிக் கொடுக்க அனுமதியளிக்கின்றது. இது தான் கல்விமுறையா?
அறிவிற்கு அளிக்கவில்லை
மனப்பாடத்திற்குத்தான்
அள்ளி வழங்கியது மதிப்பெண்.

எழுதியவர் : ந.க.துறைவன் (7-Jun-15, 9:19 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 132

மேலே