அவன் விதி

அது ஒரு
அரியவகை பானம்
ஒரு தட்டு மேலே
ஒரு தட்டு கீழே
மெல்ல திறந்து
அளவாய் சரித்தான்
புட்டியிலிருந்து
பனிக்கட்டி சில
உலாவ விட்டு
விட்டான் மூன்று
சொட்டு கீழே
கிறுகிறுத்தது
கொஞ்சம் பூமிக்கும்
சீயர்ஸ் என
அவனுக்குள்ளாகவே
சொல்லி
அளவாய் சுகமாய்
கடைசி துளியை
பருகி முடித்திருந்த
அவனை
படக்கென உள்ளிழுத்து
மூச்சு திணற மூழ்கிக்
கொண்டிருந்தவனை
கொஞ்சம் கொஞ்சமாக
பருகி முடித்த பானம்
மெதுவாய் சொன்னது
நான் மூன்றாம் விதியில்
படைக்கப்பட்டவன்.

எழுதியவர் : தர்மராஜ் (7-Jun-15, 5:13 pm)
Tanglish : avan vidhi
பார்வை : 85

மேலே