மெழுகுச் சிறகுகள்
நெல் பருக்கை சோறானது
விதைத்தவன் படுக்கையோ சேறானது
உண்டவன் நாவோ ருசியானது
அறுவடை செய்த உசுரு பறிபோனது
கடல் சென்றான் மீனவன்
தவறினால் சுறாக்களுக்கு மீன் அவன்
எல்லை மீறினால் தோட்டாக்கள் அவனுக்கு எமன்
இவனைப் போல் ஊரில் எவன்
வீதி எங்கும் சாக்கடை
அதைத் தூய்மைப்படுத்த போர்ப்படை
வாழையிலையே அவன் குடை
செருப்பிலாமல் தினந்தோறும் பயண நடை
தீக்களுக்கு உதவும் விறகுகள்
இவர்கள் உலகின் மறைக்கப்பட்ட சுவடுகள்
வாழ்கையின் எளிமைக்கு தகடுகள்
புனிதனே நீ மானிடத்தின் மெழுகுச் சிறகுகள்