மணி ஆறே கால்
மங்கலாகத் தெரிந்தது
கடிகாரத்தில் மணி..
கண்ணாடி போட்டுப்
பார்க்க..
ஐந்தே முக்கால்
ஆனது தெரிந்தது..
திரும்பிப் படுத்து
கண்ணாடியில் பார்த்தேன்..
ஆறே கால் என்பது போல்
தெரிந்தது..
பூதக் கண்ணாடி வழி பார்க்க
ஒரு பெரிய முள் மட்டும்
தெரிந்தது..
பார்வை சரியாக இருந்தாலும்
பார்க்கும் கண்ணாடியும்
சரியாக இருக்க வேண்டுமோ..!