தெய்வப்பறவை

ஒரு சிறகு
கறுப்பு
மறு சிறகு
வெள்ளை

எந்த ஒரு வயல்வெளியிலும்
இரை கொத்தாமல்
எந்த ஒரு மரக்கிளையிலும்
இளைப்பாறாமல்,
கணப்பொழுதேனும
கண்தூங்காமல்,


தயவான தன் சிறகால்
கடவுளின் நிழல் விரித்து,
பிரபஞ்சத்தின் ஆத்மாவாய்,
என்னமாய். எழிலாய்ப் பறக்கிறது
காலப்பறவை
யுகம்யுகமாய்...யுகம்யுகமாய்... ! (1992)


(கடவுளின் நிழல்கள் நூலிலிருந்து)
(எழுத்தில் மறு பதிவு )

எழுதியவர் : கவித்தாசபாபதி (7-Jun-15, 8:16 pm)
பார்வை : 85

மேலே