தடைகளைத் தகர்த்தெறி

நீங்கள் அச்சம் கொண்டால்
நிம்மதியற்ற மனத்துக்கு நித்தம் மரணமாகும்.
அதைத் துச்சமாகத் தூக்கி எறிந்தால்
துட்டரும் நெருங்கா வாழ்வு நிச்சயமாகும் !

நீங்கள் தயக்கம் கொண்டால்
பதவி உயர்வுகளும் பின் தங்கிப் போகலாம் .
நீங்கள் முன்னின்று செயல்பட்டால்
பலருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டலாம்

நீங்கள் கூச்சம் கொண்டால்
உலகத்தில் ஒரு புள்ளியாய் மறையலாம்.
நீங்கள் துணிச்சல் கொண்டால்
உலகத்தின் சூரியனாய் ஒளிரலாம்!

நீங்கள் சந்தேகம் கொண்டால்
உற்ற துணையை மனநோயாளியாக்கலாம் .
நீங்கள் சந்தோசமே பகிர்ந்தால்
தாரமும் மறு தாயாய் மலரலாம்!

நீங்கள் பேசாமல் நின்றால்
உங்கள் நியாயமும் நிர்மூலமாகி விடலாம்.
உண்மைகள் பேசப் பின் வாங்கி நின்றால்
வம்பரும் உங்கள் மேல் புனை கதை எழுதலாம்!

நீங்கள் வெட்கம் கொண்டால்
அடுத்த அடி வைக்க இடம் தேட நேரிடும்.
நீங்கள் வேட்கை கொண்டால்
எடுத்து வைக்கும் அடியெல்லாம் வெற்றிகளாகலாம்!

உங்களிடம் நேர்மை இல்லையெனில்
பொய்கள் ஒரு நாள் உங்களை புதைத்தே தீரும்.
நீங்கள் செல்லும் வழி சத்திய பாதையெனில்
புண்ணியங்கள் உங்களை பின் தொடரும்!

-வளர்மதி சிவா

எழுதியவர் : வளர்மதி சிவா (8-Jun-15, 6:21 pm)
பார்வை : 184

மேலே