ஒரு கேள்வி

சோகங்களை எங்கேனும்
கண்களால் கண்டிருக்கிறோமா?
ஒற்றைச் சிறுபனித்துளி தான்
சூரியனைப் பிரதிபலிக்கிறது
ஒவ்வொரு விடியலும்
மேற்கிலே நகம் வெட்டிக்கொண்டு
கிழக்கிலே வளர்ந்து கொள்கிறது
துக்கத்தின் அனலில்
துவண்டுபோய்க் கிடக்குமெனில்
எந்த அரும்பும் மலர்ந்து சிரிக்காது
தலையணையில் அழுதுகொண்டு
தலையெழுத்தை நொந்திருந்தால்
அடுத்தநொடி நம்மை அங்கீகரிக்காது
நெஞ்சத்தின் குழப்பங்களைக்
கொஞ்ச நேரம் ஒதுக்கிவிட்டு
எனக்குச் சரியான பதில்எழுது
சோகங்களை எங்கேனும்
கண்களால் கண்டிருக்கிறோமா?

எழுதியவர் : தண்மதி (8-Jun-15, 4:52 pm)
சேர்த்தது : தண்மதி
Tanglish : oru kelvi
பார்வை : 266

மேலே