மாற்றி கொள் உன்னை

நீ ஏன் கை ஏந்துகிறாய்......
உன்
உடல் என்ன ஊனமா,
மனம் மட்டுமே ஊனம்,
நீ
உன் மானம் மறந்தாய்!
இன்று அவமானம் ஆனாய்!
மனிதன் என்பதை மறந்து
பிச்சை கேட்கிறாய்,
எட்சிளில் ஏப்பம் விட நினைக்கிறாய்!
கோவிலில் வெளியே செருப்பைபோல்,
பேருந்து நிலையத்தில் சேற்றைபோல்,
மழைக்கால ஈசலை போல்,
எங்கும் கை ஏந்துகிறாய்!
ஏந்திய கைகளை
வேலை கேட்டு உயர்திப்பார்,
உன் உருவம் மாறும் .....நீயும் ஒரே உதிரம்தான்.......
என்றும் அன்புடன்
அ.மணிமுருகன்