கள்வன் அளித்த சிறைவாசம்
ஆம்! அவன் கள்வன்தான்!
பணத்தை திருடி பதுக்கும் காலத்தில்
அவள் மனதை திருடி
இதயச்சிறையில் இதமாக
பதுக்கிவிட்டான்..
அவன் விழியோரம் மின்னிடும்
புன்னகையால்
அவள் இமைகளின் அடி வழி
இரு விழி போக
வைத்துவிட்டான்..
அவள் வலக்கைக்கு மட்டும்
எப்போதும் பத்து விரல்கள்
அவள் கைகோர்த்தபடி
என்றும் சொல்ல
வைத்துவிட்டான்..
ஊர் அறியாக்குழந்தை அவள்
இன்று உலகம் காண்கிறாள்
அவன் விழி சாளரத்தின் வழி பார்த்தபடி..