புது உணர்வாய் நீ

காயங்கள் யாவும் - உன்
கண் பார்வையில் மறைந்ததடா...
முற்றுப் புள்ளியிட்டு - என்னில்
முடித்துவைக்கப்பட்ட வாழ்வை
தொடர் புள்ளிகளிட்டு - இனிதாய்
தொடங்கி வைத்தவன் நீ!..
உன் ஓர் குறுந்தகவல் - என்
நாடி நரம்பெல்லாம் - உயிர்
பெறச் செய்யும்!
உன் ஓர் அழைப்பு - என்
மொத்த நாளினையும் - இதம்
கொள்ள செய்யும்!
என்னில் புது உறவாய் நீ!
எனக்குள் புது உணர்வுகள் உன்னால்!
என் உலகமே புதிதாய்,உன் நினைவால்!
தென்றலென உன் பாசம் - என்
உயிர் தீண்டிப்போக - வாழ்வே
நந்தவனமாய், உன் வரவால்!
கொட்டும் மழையென - என்னில் '
அன்பை நிறுத்தாமல் பொழிபவனே...
உன் கனிவுக்கு ஈடாய் - தருவதற்கோ
கைமாறாய், என்னிடம் ஏதுமில்லை..
காணிக்கை இடுகிறேன் என்னை நானே,
காத்திட வல்ல இறைவன் உன்னை தானே...