பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி - மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி
10.மெய்ப்பொருள் காண்பது அறிவு.!

இது யதார்த்தம். தமிழகத்தில் குக்கிராமங்களில் நிலை இதுதான். பல இடங்களில் நாம் காணும் காட்சி இதுதான். .
இரட்டைக் குவளை முறையை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் இயக்கங்கள் போராடியபோது, ஒரு ஊரில் வட்டாட்சியர் வந்து அனைவருக்கும் பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் கொடுக்க வைத்து, அவரும் குடித்துப் போனாராம். முன்பு தாழ்த்தப்பட்டவர்களுக்கு கண்ணாடி தம்ளர்கள் தனியாக ஓலையில் செருகப்பட்டிருக்கும். இன்று அவர்களுக்கு பிளாஸ்டிக் கப்புகள். இந்தப் போலி மக்களாட்சியின் இயலாமையை எடுத்துக்காட்டும் ஒரு நல்ல படைப்பு. பென் டிரைவில் பறையடிக்கும் இசையைக் கேட்பதிலிருந்து, ஒரு ஆவலைத் தூண்டும் விதத்தில் கதை நகர்த்திச் செல்லப்படுகிறது. எந்தத் தொய்வும் இல்லை.

“மிக மெலிதான பிளாஸ்டிக் கப்.டீயிலிருந்த சூட்டை, வேகமாக கையில் கடத்தத் துவங்க,” என்பதில், யதார்த்தத்தின் வெப்பம் அந்த ஓட்டுநரின், சண்முகத்தின் நெஞ்சில் பரவுவதைப் பிம்பப்படுத்துகிறது.
இறுதி வரிகளில் “சண்முகத்தின் விழிகளில் நீர் திரண்டு நிற்பது தெரிந்தது.” என்பது யதார்த்தம், எனினும், “பிளாஸ்டிக் வெப்பத்தால் சண்முகத்தின் கண்களில் சூடு பரவியது” என்பது போலிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
மொத்தத்தில் நல்ல சிறுகதை, சமுதாய மாற்றத்துக்கான விதை.

" இது என் சொந்த படைப்பே"

எழுதியவர் : மயில் அமுது (9-Jun-15, 8:28 pm)
சேர்த்தது : மயில் அமுது
பார்வை : 123

மேலே