காதலின் காதல் கடிகாரம் 555

காதல்...

பருவ வயதில் இருபாலரின்
கனவுகளின் கருவறை...

பருவத்தின் நினைவுகளின்
வளர்பிறை...

அறுந்துபோகாத
தலைமுறை...

காதலுக்காக காத்திருப்புகளில்
கவலைகள் சேர்ந்த கடிகாரம்...

நிமிடங்கள் செல்லாமல்
யுகங்களாக...

கைகளில் சேர்ந்துவிட்டாலே
நொடிக்கு நொடி அலாரம்...

காதல் அது விசித்திரமான
கடிகாரம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Jun-15, 7:53 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 176

மேலே