நம் பருக் குழந்தைகள்

என் வெள்ளைத் தோலில்
வியர்வை நீரூற்றி
மயிர்க் கால்கள்
பிரசவிக்கும்
பருக்களில்;
உன் மீசை முத்தங்கள்
தரும் அழுத்தங்களால்
பனிக்குடம் உடைந்து போன
சுகம் கண்டோ
என்னவோ???
மீண்டும்
பிரசவத்திற்காகவே
காத்திருக்கின்றன,,,
வரிசையாய்
என் பருக்கள்...

யாமி...

எழுதியவர் : யாமிதாஷா (9-Jun-15, 7:04 pm)
சேர்த்தது : யாமிதாஷாநிஷா
பார்வை : 98

மேலே