உயிர் நூல்
சுதந்திரம் கிட்டியதாய்
சுழன்று கொண்டிருந்தது
காற்றாடி...
நூல் விட்டு
தூரத்தில்
நின்றானொருவன்...!
வாழ்வின் வட்டத்தில்
வந்துசெல்லும் மனிதனும்
தான்...தானென்றான்
தன் உயிர்நூல்
இறைவனின் கையில்
இருப்பதை உணராமலே ?
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்