வித்துக்கள் இருப்பதும் உங்களிடமே

​பிறந்திட்ட மனிதர்களே
விளைந்திட்ட விதைகளே
வளர்ந்திட்ட விருட்சங்களே
தழைத்திட்ட தலைமுறைகளே
விதையுங்கள் நல் வித்துக்களை
இனமொழி உணர்வுகள் கலந்திட்டு ​
பகுத்தறிவு பண்பாடு இணைந்திட்டு
தன்மானம் பொதுநலமென உரமிட்டு
வகுத்தறியும் சிந்தையுடன் பயிரிட்டு
முளைக்கும் களைதனை களைந்திட்டு
விளைச்சலை எதிர்நோக்கி காத்திட்டால்
பண்பட்ட பயனுள்ள முடிவே கிட்டிடும் !

சிந்தைதனில் கொள்ளுங்கள் இதனை
சிந்தனைகளும் சீராகவே பெற்றிடலாம்
விளைவதும் நல்முத்துக்களாகும் என்றும்
சமுதாயமும் சிறப்புடனே உருவாகிடும் !

வித்துக்கள் இருப்பதும் உங்களிடமே
விளைப்பதும் உங்கள் முறைதனிலே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Jun-15, 8:50 am)
பார்வை : 142

மேலே