கல்லறைப் பூக்கள்

கைவலிக்க எழுதும்போது
கண்டுகொள்ளாப் பதிப்பகங்கள்
கல்லறையில் பூவைப்பார்போல்
கண்டெடுத்துப் பதிப்பார்கள்!
****
நாடுகளெல்லாம்
உலகமயமாகிக் கொண்டு..
நாங்களோ
உலகவசமாகிக்கொண்டு!
*****
ஒரு குறுந்தொகையின் மறுபதிப்பு...

ஆசைகொண்(டு) இல்லாதே அறிந்ததை வைத்தே,
வாசனைப் பூக்களின் வகைபல தெரிந்த,
நேச வண்டே! நேர்மையின் சொல்வாய்:!
பாசம் மிகுந்த ,என் பாவையின் கூந்தலின்
வாசமிகு பூவுமே வாய்க்குமோ உலகிலே!
********

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (10-Jun-15, 1:26 pm)
பார்வை : 108

மேலே