கனவு

சுவரற்ற சுவர்களுக்குள்
ஒவ்வொரு அசைவிற்கும்
உடைந்து விடாதபடி
ஒன்றிலிருந்தொன்றாய்
உருண்டெழுந்து உருவாகும்
ஒரு கோணல் சித்திரப் படிமம்.

உள் பரவும் அடர் வெளிச்சம்...
சுடர் வெப்பம்...
ஆள் முழுங்க...
அறையெங்கும் வியாபிக்கும்
கரை மீறும் பேரிரைச்சலாய்...
சுவர்க் கோழி ரீங்காரம்.

செவி நடுங்கும் அதிர்வில்...
இமைகளைக் கீழிறக்கி
உதிர் கனவாய் பறக்கிறது
உணராத நினைவுகள்.

விழி வரையும் கண்ணீர்
கனத்த இருள் தனிமையிலே...
கரையற்ற சிறை வழியே
தன் பாதை தேடும்.

தலை சுற்றித் தனி உலகம்...
முதுகின் மேல் முள் சிலுவை...
இடை இடையே...
படுக்கையிலே இடப் பெயர்ச்சி...
தளும்பித் தரை நோக்கி வீழுகையில்..
நிசப்தத்தில் எழும் (நி)சப்தம்.

பின் தொடரும் மௌனத்தில்
குளித்து வியர்க்கிறது என் கனவு.

எழுதியவர் : rameshalam (10-Jun-15, 1:27 pm)
Tanglish : kanavu
பார்வை : 195

மேலே