இருட்டுக் கடை அல்வாவும் இலக்கியமும்
இருட்டுக் கடை முன் நின்றால்
அல்வா பற்றிப் பேசலாம்
நாவினிக்கும் கையில் நெய்யொழுகும்
இலக்கியத் தளத்தில் நின்று
மனிதம் நாகரிகம் வாழ்வு பற்றிப்
பேசவேண்டும்
நெஞ்சுயரும் கவிதைப் பெருக்கெடுக்கும்
மாறாக
காழ்ப்பையையும் கசப்பையும்
சொல்லில் உமிழ்ந்து
அறிவு ஜீவித அநாகரீக சொற் பூசலிட்டால்
நெஞ்சு கசக்கும் மனசாட்சி உறுத்தும்
உன் இலக்கியத்துடன் மரியாதையும் வீழும் !
நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பா -நீ
சொல்லுக்கு வேலி இடவேண்டும் --இங்கே
சொர்க்கம் சொர்க்கமாயிருக்கட்டும் .
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு : இழி சொல் அவையில் சொல்லத் தகா சொல் வசவு ---
இவைகள் அவ்வப்போது இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன .
நற் கவிஞர்கள் சிந்தனைனையாளர்கள் இவற்றிலிருந்து விலகி
இருங்கள் ஆரோக்கிய இலக்கிய உறவை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள்
"நிபந்தனனகள் " பார்கிறீர்களோ இல்லையோ வள்ளுவரின் இக்குறளை
நெஞ்சில் நினைத்துப் பார்த்து பின் எழுத முற்படுங்கள்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
-----பரிமேலழகர் உரையை பின்பு பார்ப்போம் கவிமேலழகர்கள் நாம்
முதலில் நெஞ்சில் வைப்போம்