முகமற்ற சுவாசம்
வராத
குறுஞ்செய்தியில்
காலம் நீள்கிறது...
நீண்ட காலத்தில்
ஒரு தவறவிட்ட
அழைப்பு...
தவறிய தூரத்தில்
அழையாத
அலைக்கற்றை...
அலைகளின் ஆர்ப்பாட்டத்தில்
வந்தும் வராத
அழைப்பின் ஓசை...
ஓசை அடங்கிய
நேரத்தில் மூச்சிரைக்கிறது
முகமற்ற சுவாசம்...
கவிஜி