கண்களின் கேள்வி

என் கண்கள் இப்போதெல்லாம்
எந்த துன்ப கதையை கேட்டாலும்
கண்ணீரே விடுவதில்லை.
ஏனென்று
என் கண்களையே கேட்டுவிட்டேன்?
உன்னுருவின் பிரதிபிம்பம்
தன்னுள் இருப்பதால்
உப்பு நீரால் எப்படி
உன்னை கலங்கடிப்பதென்று?
என்னையே
எதிர் கேள்வி கேட்கிறது
என் கண்கள்!

எழுதியவர் : வென்றான் (10-Jun-15, 7:49 pm)
Tanglish : kangalin kelvi
பார்வை : 100

மேலே