இயல்பாய் இருங்கள்.
இயல்பாய் இருங்கள்;
ஈசனில் இருங்கள்.
இறுக்கத்தை விடுங்கள்;
இரக்கத்தைத் தொடுங்கள்.
உறக்கத்தை விடுங்கள்;
உவகையில் இருங்கள்.
உண்மையாய் இருங்கள்;
உன்னதத்தில் இருங்கள்.
வன்மையை விடுங்கள்;
மென்மையாய் இருங்கள்.
புன்மையை விடுங்கள்;
மேன்மையில் இருங்கள்.
உதவியாய் இருங்கள்;
உள்ளன்புடன் இருங்கள்.
அமைதியாய் இருங்கள்;
ஆனந்தித் திருங்கள்.
ஆத்மனில் உறையுங்கள்;
பரமாத்மனில் நிறையுங்கள்.
பாலுகுருசுவாமி