என் வாழ்வும் தாழ்வும்
மனமே
என்னை நீ
நிலையாக இறுக்கவிட மறுக்கிறாய்!
ஒரு செயலால்
பல மாற்றங்கள் சில நேரம் உன்னால்,
ஒரு செயலால்
சில ஏமாற்றங்கள் பல நேரம் உன்னால்,
போதும் என்ற பக்குவம்
உன்னில் ஏற்படவில்லை!
நான்
சிலையாக உள்ளபோது
நீ சீறிபார்க்கிறாய் !
நான்
அலையாக ஆகும்போது
நீ அலைக்கழிககிறாய்!
இப்படி
என் வாழ்வும் தாழ்வும் - உன்
நிலையில்தான் உள்ளது ..........
என்றும் அன்புடன்
அ.மணிமுருகன்

