எது கவிதை

மறையுறு
மையம் பற்றி
மாறிடாத்
தூரம் சார்ந்து
செறிவுறு
நெறிகள் செப்பி
செம்மையாய்
அசையும் செய்யுள்
தொலையுறு பரிதி
காலும்
தீர்ந்திடா
ஒளியின் கீற்றாய்
நலிவுறு இருளை
நீக்கி
நாளெல்லாம்
வாழுமன்றோ...

எழுதியவர் : உமை (11-Jun-15, 7:16 pm)
Tanglish : ethu kavithai
பார்வை : 140

மேலே