அவசியம் கற்போம் நன்னெறிகளை

​பொறுப்பும் பொறுமையும் அவசியமன்றி
பொல்லாப்பும் பொறாமையும் அல்லவே !
கடமையுணர்வும் நன்றிபெருக்கும் தேவை
மடமையும் மதியிலாசெயலும் அல்லவே !

காண்பீர் காட்சியை காவலாய் நிற்பவரை
கடமை ஆற்றும் பிராணியின் நிலையை !
அச்சமும் கொள்வர் நுழைந்திட எவருமே
அத்துமீறின் அலறல் சத்தமும் கேட்டிடுமே !

நன்றியுள்ள ஜீவன்தான் நாயும் அறிந்ததே
நல்லறிவு கொண்டது நமக்கும் புரிந்ததே !
காத்திடும் கருத்தாய் வளர்க்கும் எவரையும்
காலமும் உதவிடும் நண்பனாய் உள்ளவரை !

உடனிருந்தே கவிழ்ப்பவர் உலகத்தில் உண்டு
உடமைகளை களவாடும் உள்ளங்கள் உண்டு !
உள்ளும் புறமும் வேறுபடும் இதயங்களுண்டு
உள்ளவரை மாறாதவரும் இவ்வுலகில் உண்டு !

ஆறறிவு மனிதர்களில் மாறுபடும் மண்ணிலே
ஐந்தறிவு நாய்களோ மாறாததும் மகிழ்ச்சியே !
அன்பினை காட்டுவீர் பிராணிகளிடம் என்றும்
அவசியம் கற்போம் நன்னெறிகளை அதனிடம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Jun-15, 9:17 pm)
பார்வை : 325

மேலே