காதலனும் வந்திடுவான்

காதலனின் வரவிற்காக
கால்கடுக்கக் காத்திருந்து
காணாமல் போனாதனால்
காய்ந்திட்ட விழிகளுமே
கவிழ்ந்திட்ட கப்பலாய்
கண்ணீரில் மூழ்கினவே !
கடற்கரை மணற்பரப்பில்
கவலையுடன் அமர்ந்திருக்க
கடலலைகள் அருகில்வர
கன்னியவள் முறையிட
கடல்நீரும் உரைத்தது
காத்திரு அவனுக்காக !
கனிந்திடும் காலமும்
காதலனும் வந்திடுவான்
கனவுகளும் நனவாகும்
கற்பனைகள் நிஜமாகும்
காலத்தில் நடப்பவை
கட்டாயம் நடந்திடும் !
காலமும் களிப்புடனே
கழித்திடு வாழ்வையும்
கற்கண்டாய் இனித்திடும்
கவலைகள் அகன்றிடும்
கண்டிடுவாய் நீயுந்தான்
கண்மலர சேய்களையும் !
பழனி குமார்