இருபது 20

சுழுக்குப்பிடித்த காலங்களில்
கால்ப்பிடித்த தமையனையும்,

தடுக்கி விழுந்த காயத்திற்கு - மருந்திட்ட
கரங்களையும் மறந்து -இன்று
மாற்றானுக்கு விலைப்படிந்து
எதிரெதிராய் நின்கின்றாய்.....

வட்டமிட்ட காந்தம் போல்
தோழமையுடன் இருந்தோமே- இன்று
உடைந்து விட்ட காந்தமாய்
புறமுதுகு காட்டுகிறாய்....

கூட்டாஞ்சோறு தின்ற
காலங்கள் கடந்து - இன்று
கூடா நட்புடன் இணைந்து
அடிக்கவும் துணிந்தாய்.....

துவண்டிருந்த காலங்களில்,
துணை நின்ற தோழனையும்

தூக்கமில்லா இரவுகளில்,
தூற்றி விட்ட தோழனையும்

பந்த பாச பிரிவினில்
பக்கத்துணையாய் நின்றவனையும்

மண்ணோடு மறந்து விட்டு
மாற்றோனோடு சென்றாயோ ?

வண்ணங்கள் மாறிவிடின்
எண்ணம் தான் மாறிடுமா ?

ஆயிரம் வண்ணங்கள் உதித்திடுனும்,
தேசிய கொடி தான் வெழுத்திடுமா ?


அடித்தாலும் உதைத்தாலும்
அன்னை மடி மறந்திடுமா ?

எத்தனையோ கழகங்கள்
வழி நெடுக்க காத்திருக்க,

மாறு வேடப்போட்டி முடிந்து
பள்ளி வரும் குழந்தைப்போல்
டி 20 முடித்து விட்டு
அணி திரும்பிய மட்டைப்பந்து வீரர்களே !!

வேற்று வேற்று மொழியெனினும்
இந்தியன் என்ற உள்ளுணர்வு
எல்லளவும் குறைந்திடுமா ?

“இந்தியன்” என்ற உணர்வோடு
பழைய கதை மறந்திடுவாய் !!
புதிய களம் கண்டிடுவாய் !!

தோழமையுடன் நின்றிடுவாய்
வந்தே மாதரம் சொல்லிடுவாய்
மட்டைப்பந்து வீரர்களே !!

யாவரும் கேளீர்ரென
வித்திட்டோம் விதை விதைத்தோம் !!

விலை படிந்து போயிடினும்,
பிடி மண்ணையும் விட மாட்டோமென
உலகுக்கு சூளூரைப்போம்
மட்டைப்பந்து வீரர்களே !!

எழுதியவர் : காவியன் (13-Jun-15, 1:50 pm)
பார்வை : 49

மேலே