ஈசல் வாழ்க்கை வாழ்ந்திடு
நிரந்தரமற்ற உலக வாழ்கையை
செயற்கை மின் ஒளியின் கீழ்
வட்டமிட்டபடி வாழ்ந்து முடிக்கும் ஈசல்
சந்தோசமாய் தான் கழிக்கிறது
தன் ஒரு நாள் வாழ்கை பயணத்தை
பல ஆயிரம் ஈசல்கள் வாழும்
நாட்களை வரமாய் பெற்றிருப்பினும்
தன் மன சிறகுகளை ஒடித்து கொண்டு
வேதனை வட்டத்திற்குள் சுற்றி திரிகிறது
இன்பம் கொள்ளா மனித வாழ்க்கை
மனிதனே !!!
ஒரு முறை ஈசலை கவனித்து பார்
உனக்குள் ஒரு குரல் தானாய் கேட்கும்
வேதனை யாவும் புறம் தள்ளி
அன்பெனும் பரந்த ஒளியின் கீழ்
ஈசல் வாழ்க்கை வாழ்ந்திடு என்று....!!!