விநாடிக்கவிதைகள் 4
விநாடிக்கவிதைகள்
===========================================ருத்ரா
உரசினால் உடனே கலர் கலராய்
பற்றிக்கொள்ளும்
மத்தாப்பு மட்டும் தான் காதலா?
______________________________________________
காதலியின் உதடு தேடிய யாத்திரையில்
காலம் எனும் கவர்ச்சியான
காதலியை தழுவிக்கொள்வதும் காதலே.
_________________________________________________
"நாளென ஒன்றுபோல் காட்டி
உயிர் ஈரும்" அந்த வாள்
எத்தனை ரத்தினக்கற்கள் பதித்தது?
__________________________________________________
சித்தர்கள் சிவம் எனும் ஆழத்தை
காட்டுவதற்கும்....முதலில்
அந்தக்கடலில் விழுந்து எழு என்கிறார்கள்.
________________________________________________
கஜுராஹோ எனும்
கல் பரிமாணம்..காதலுக்கு
ஒரு கனபரிமாணம்.
_________________________________________________
சிற்றின்ப பேரின்ப கனபரிமாணங்கள்
உடைந்து நொறுங்குவது
இயற்கையும் மனிதமும் கலக்கும்போது தான்.
___________________________________________________
ஆணில் பெண்.பெண்ணில் ஆண்.
இதில் எழுத்துக்கள் கூட்டி
இலக்கியம் பேசினால்
உருட்டுக்கட்டைகளின் பஞ்சாயத்து எதற்கு?
___________________________________________________
உடலுக்குள் உள்ளம்
கிணறு வெட்டுவதும்
உள்ளத்துள் உடல்
மின்னல் வெட்டுவதுமே காதல்.
___________________________________________________
ஆதலால் காதல் செய்வீர்.
கண்ணும் காதும் வாயில்"கைபேசி"
பாலம் கட்டிக்கொள்ளட்டும்.
__________________________________________________________