சேகுவேரா - ஓர் தவிர்க்க முடியா புரட்சியாளன்

வீரத்தின் இடி முழக்கம்
புரட்சியின் மறு உருவம்

ஆஸ்துமா நோயாளியாய் பிறந்து
தொழு நோயாளிகளுக்காய்
அலைந்த தென்னமெரிக்க
வீதிகளில் மருத்துவன் சே!

மார்க்சிய புத்தங்கள் பல வாசித்து
கொள்கைளை ஒன்று திரட்டி
எழுத்துகளாய் அழியா வடிவம்
தந்த எழுத்தாளன் சே!

உலக விடுதலைக்காக
பயணித்த தேசமெங்கும்
புரட்சிகரத் தத்துவத்தை
எடுத்துரைத்த புரட்சியாளன் சே!

உழைக்கும் மக்களின்
உரிமைகளை எடுத்துச்சொல்லிய
தலைவனாய் வரலாற்றில்
சரித்திர நாயகன் சே!

அடக்குமுறையைகளை உடைத்து
வேற்றுமைகள் விடுத்து
ஒற்றுமையை வகுத்து
அநீதியை அகற்றிய தூயவன் சே!

உலக சமத்துவத்திற்கு
மாற்றங்கள் தேடியலைந்து
ஏகாதிபத்தியம் எதிர்த்த
கொரில்லாப் போராளி சே!

அமெரிக்க தோட்டாக்கள்
தன்னை துளைத்த போதும்
தன்கொண்ட கொள்கைகளிருந்து
மாறாத மாவீரன் சே!

காங்கோ காடுகளும்
கியூபா போன்ற நாடுகளும்
என்றும் சே-வின்
நினைவுகளை சுமந்தே வாழும்

கால ஓட்டங்களில்
மாற்றங்கள் பல நிகழ்தாலும்
புரட்சி எனும் சொல்
ஒலிக்குமிடத்தில்
சே எனும் பெயரே எதிரொலிக்கும்

புரட்சி முளைக்கும் இடத்தில்
சே-வின் புகைப்படமே
முதலில் முளைத்திருக்கும்

சேகுவேரா,
ஓர் தவிர்க்க முடியா புரட்சியாளன்..

-கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (14-Jun-15, 1:56 am)
பார்வை : 956

மேலே