காக்கா முட்டை

காக்கா முட்டை
=============================ருத்ரா

படம் படு சூபர்.
விகடனுக்கு தான் 60/100 மார்க்கு
கொடுக்கத்தெரியுமா என்ன?
நாமும் கொடுக்கலாம்
160/100 மார்க்கு!
வகுப்பில் முட்டை வாங்க்ற பயலுவ எல்லாம்
பீட்சா தின்னும் நினைப்பில்
அந்த அழகிய புள்ளிகள் நிறைந்த‌
காக்கா முட்டைகளையும்
ஹாஃப் பாயில் போட்டு தின்பது தான்
கதையிலும் கதை!
அதன்
கருவிலும் கருவாக இருப்பது
ஒட்டுமொத்த சமுதாயத்தின்
வக்கிரத்தை
அந்த இளம்பிஞ்சுகளின்
பால்வடியும் பிம்பங்களில்
கள்ளிப்பாலாய் வழிய விட்டு
நம் முதுகில்
சுளீர் சுளீர் சவுக்கடிகளாய் தருகிறார்
இயக்குந‌ர்!
அழியாத கோலங்கள் என்று
"பாலு மகேந்திரா" கூட‌
"பாலியல்" திருப்புமுனைகளை
அந்த பத்து பன்னிரெண்டு வயதுகளின்
முட்டுச்சந்தில்
அக்கினியாய் மூளவிட்டு
தீப்பந்தம் தான் காட்டினர்.
இந்த காக்கா முட்டைகளோ
புது யுகம்
கருக்கொள்ள்ளும்போதே
கருச்சிதை அடையும்
அவலங்களை அழகான வெளிச்சமாக்கி
தீச்சுடர் ஏந்துகிறது.
ஒரு அக்கா தம்பி பாசத்தில்
வங்காளத்து மண்ணையும்
இந்தியாவின் நரம்புகளையும்
பின்னித்தந்து
கேமிரா வழியேயும்
ஒரு ஊமைப்பூகம்பத்தின் பிரளயமாக்கி
அந்த பிஞ்சு செப்புகளில்
ஒரு அடர்ந்த ஆரண்யத்தை காட்டவில்லையா
சத்யஜித் ரேயின் "பாதேர் பாஞ்சாலி".
அந்தப்படத்தின் நீண்ட ஏக்கமும் நெடியும்
இதிலும் நிரடுகிறது.நிரவுகிறது.
கதையின் களமும் கோணமும்
வேறுபட்ட போதும்
அந்த "சின்னப்பயல்கள்" முகங்கள் எல்லாம்
"ரேயின்" தீர்க்கமான கண்களால்
மிடையப்பட்டிருக்கின்றன.
விடியலின் ஏக்கத்தை
தன் துண்டு பீடி நெருப்பின் சூட்டில் கூட‌
காண த்ராணியற்ற‌
பெரிசுகளுக்கான "அடல்ட்ஸ் ஒன்லி"யையும்
அடைக்காத்திருக்கிறது
இந்த "பொடிசுகளின்" படம்.
ஒரு ஹாலிவுட்டின் "ஆஸ்கார்"பரிசுக்கு
தகுதியாய் விட்ட இந்த‌
"காக்காமுட்டை"களுக்கு
சிபாரிசு சூட்சுமத்தை "காக்கா பிடிக்கும்"
கலை தெரியுமோ? தெரியாதோ?
நம்மைப்பற்றி நமக்கு நல்லாவே தெரியும்.
ஒரு குத்தாட்ட ரேஞ்சில்
பத்தோடு பதினொன்றாய்
இந்த படம் மறைந்து போகாமல்
ஒரு உலகவிருதும்
இந்த காக்காமுட்டைகள் நடுவே
குஞ்சு பொரிக்க வேண்டும்.
நம் எண்ணம் நிறைவேறட்டும்.

==================================================

எழுதியவர் : ருத்ரா (14-Jun-15, 3:40 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : kaakkaa muttai
பார்வை : 230

மேலே