இல்லத்தரசர்

ஏண்டி மென்பொருள் துறையிலே நீ மாசம் ரெண்டு லட்சம் சம்பாதிக்கிறே . உன்னோட கணவர் எங்கே வேல பாக்காறாரு?

அவருக்கு வேலை எங்க வீட்டு சமையலறையிலெ தான்.

ஏண்டி என்னடி சொல்லறே?

அவரு 10, 12, பிடெக் எல்லாமே பல பல்டி அடிச்சுத் தேறி வந்தவரு. (கேம்பஸ் இண்டர்வியூ) வளாக நேர்முகப் பேட்டியிலெயும் ஒதுக்கி ஓரம் கட்டப்பட்டவர். அப்பறமா ஒதுக்குப் புறமா ஆள் அரவம் இல்லாத இடத்திலே இருக்கற ஒரு கல்லூரிலெ உருண்டு பொரண்டு எம்டெக் முடிச்சாரு. பொறியியல் படிப்பில் என்னைவிட அதிகம் படிச்சவர்ன்னு என்ன இவருக்கு கட்டி வச்சிட்டாங்க. எங்கே போனாலும் இவர் திறமையை மெச்சி ஒதுக்கித் தள்ளறாங்க. எனக்கு கெடைக்கிற சம்பளமே போதும்ங்கறதாலெ அவர என் இல்லதரசர் ஆக்கிட்டேண்டி. நான் செஞ்சது தப்பா?

ஒண்ணுக்கும் லாயக்கில்லாத இல்லாத ஆளுக்கு இதவிட நல்ல வேலையாத் தரமுடியாதடி.

எழுதியவர் : மலர் (14-Jun-15, 3:48 pm)
பார்வை : 163

சிறந்த நகைச்சுவைகள்

மேலே