சே
பயணங்களில்
தேசங்களை இணைக்கும்
சிறகுகள்...
சிந்தித்த தருணத்தை
எல்லாம்
இல்லாதவனுக்கு
தந்து விட்ட உறவு....
தனி மனிதன் உணவை
இனி ஒருவன்
கொள்ளாத தென்ற
தோட்டாக்களின் தத்துவம்...
மூச்சு வாங்க முடியாத
போதும் பேச்சையே
ஆயுதமாக்கிய மாதவம்...
கடக்க கடக்க
ஒன்றுமில்லையாகினும்
கடக்கவாவது பாதை
வேண்டும் என்ற புத்தகம்....
கம்பீரப் பார்வையில்
தோல் புரளும் முடிக் கற்றையில்
உண்மைகளை மட்டுமே சுமக்கும்
எங்கள் "சே"
இவர் போல
வாழ்த்திடத்தான்
இந்நாளை
போற்றுகிறோம்...
இவர் காணும்
வாழ்க்கையைத்தான்
எந்நாளும் கொடி
ஏற்றுகிறோம்...
கவிஜி