உலகம் கெட்டு போயிடுச்சு

ஆறலையே ஆறலையே மனசு ஆறலையே
மாறலையே மாறலையே மக்கள் மாறலையே
தேறலையே தேறலையே எதுவும் தேறலையே
ஊறலையே ஊறலையே கருணை ஊறலையே


ஊரவிட்டு போயிவிட்டு வந்துநானும் பார்த்தேனே
நாட்டவிட்டு போயிவிட்டு வந்துநானும் பார்த்தேனே
கடலதாண்டி போயிவிட்டு வந்துநானும் பார்த்தேனே
மலையத்தாண்டி போயிவிட்டு வந்துநானும் பார்த்தேனே

அதே மத சாதிச்சண்டை
அதே லஞ்ச ஊழல்வாதி
அதே ஊர மயக்கும் அரசியல்
அதே பணத்திற்காய் அலையும் பேய்கள்

எல்லாமே இருக்கு அப்படியே தான்
எனக்கோ கிறுக்கு அதனாலே தான் (மாறலையே..)

மனசுவிட்டு போயிடுச்சு என்னநானும் செய்வோனோ
உலகம்கெட்டு போயிடுச்சு எப்படிநானும் வைவேனோ
என்னைநானே திட்டிக்கிட்டேன் மனுசப்பொறப்பு வீணோனு
ஒன்னமட்டும் மறந்துப்புட்டேன் திருந்தாசென்மம் இவந்தானு

அதே இயற்கை அழிக்கும்புத்தி
அதே மாசு பரப்பும்யுக்தி
அதே தேவையில்லா குணங்கள்
அதே தேவைதேடி பறக்கும் மனங்கள்

எல்லாமே இருக்கு அப்படியே தான்
எனக்கோ கிறுக்கு அதனாலே தான் (மாறலையே..)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Jun-15, 12:42 am)
பார்வை : 553

மேலே