கரு மாற்றி

கரு மாற்றி ….
இதற்கு எனக்கு சம்மதமில்லை…என்றேன்…
தலையாட்டி மறுத்தார் டாக்டர் ஷானி…
என் முட்டாள் நண்பனே….
இது அறிவியல்… இங்கு உன் உணர்சிவசப்படுதல்
அநாகரிகம்…..
மேலும் நாம் செய்யப்போவது மருத்துவ புரட்சி…
காற்று பலமாய் வீசியது …
என் கடைசிக்கோப்பைத் திரவம் காலியாகியிருந்தது
இந்த 72 வது மாடியின் விளிம்பிளிருந்து தொடங்கும் இக்கணம்
மிகப்பெரிய மாறுதலுக்கானது…
எனக்கு அவகாசமோ அதற்கான
தேவையிருப்பதாகவோகூட டாக்டர் ஷானி கருதவில்லை….

வானம் முழுவதும் நட்சத்திரக்கூட்டம்
காற்றுக்கு மாறியமைக்கும் மேக ஓவியங்கள்…
கமான் மை பாய்… லெட்ஸ் டு இட்….
டாக்டர் ஷானி பல முறை முதல் முயற்சியில்
சரியான கருக்களை உருவாக்கி இருக்கிறார்
எல்லாம் விலங்கினங்களோடுதான் …
இது தான் முதல் மனித சோதனை
இதனால் நாட்கள் குறையும்…


முனியம்மாவின் மகள் வள்ளி கண்கசக்கி சொன்னாள்
இந்த குழந்தை வேண்டாம்… இது… இது தான் டாக்டர் ஷானி எதிர்பார்திருந்தது…
(முனியம்மா என் வீட்டு பனிப்பெண் அவள் மகள் அவள் பொய்க்காதலால் கருவுற்றிருந்தாள்)
சரியாய் முப்பது மணிநேரம்…
எல்லாவற்றையும் மாற்றியமைத்தாயிற்று…
இனி ஒவ்வொரு வாரமும் சோதிக்கவேண்டும்….
வள்ளியையும் பாதுகாக்கவேண்டும்…

தொட்டியில் ஒரு ரோஜா பூத்திருந்தது
அருகே அமர்ந்து பார்த்திருந்தேன்
காற்று வேகமாய் அடித்தது ..இன்னும் பலமாய்
இன்னும் பலமாய்…
ஒரு இதழும் உதிரவேயில்லை
டாக்டர் ஷானி அருகே வந்தார்
குனிந்து பார்த்தார்
மை க்ரேட் ரோஸ் !!!

அந்த நாளிலிருந்து சரியாய் நான்காவது வாரம் …
வள்ளியிடம் மெல்ல சொன்னேன்..
இது ஒரு சிந்தடிக் பேபி...உன் குழந்தையில்லை …கொஞ்சம் ….
முடிக்கும்முன்னால் அழுதாள்….
தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.. பின் சரியென்றாள்…
கரு நான்கு மாதத்திலேயே முழு வளர்ச்சியடந்திருந்தது…
டாக்டர் ஷானி நாள்குறித்தார்…
சரியாய் ஐந்தாவது மாதத்தில் எடுத்தோம்…
குழந்தை பிறந்தவுடன்
தானே முளைதேடி பால்குடித்தது..
நடந்தது… பேசியது…,
பின்…
பின்…
துப்பாக்கிதேடியெடுத்து என்னையும் டாக்டர் ஷானியையும்
குறிபார்த்தது….

எழுதியவர் : இயற்கை (15-Jun-15, 6:06 am)
பார்வை : 84

மேலே