கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
தூரமானவள்
நீ தான்
என் தஞ்சமென
நினைவில்
நின்று கொண்டாள்.......
கண்ணில் ஒளியும்
அதில்
வலியும்
என்றாகிப்
போனவளே .....காலமெல்லாம்
என்னோடு
கடந்து வரும்
நிழல் அல்ல
நிஜம் தானடி
நீ .....
உயிர் போகும்
வலியை
உன்னை விட உலகில்
யாரால்
தரமுடியும்...?
யாரும் தராத
கருணையை
அள்ளித் தந்தவளே
அந்தக்
கடவுளும்
எனக்கு
நீயேதானடி......
மந்திரமும்
இல்லை
ஒரு
தந்திரமும்
இல்லை
உன்
விழிகளுக்குள்
என் பார்வைகள்
கண்டேனடி .....
தூங்கும்
நேரமும்
தூங்காத
பொழுதும்
ஏங்காமல்
எந்த நிமிஷமும்
எனை கடந்து
போவதில்லை .....