கல்யாண ஆசை
கௌரி நேரம் பார்த்து
கோலாகல மேடை அமைத்து
கொட்டும் இசை மழையில்
கைகள் நம் இருவரும் கோர்த்து
கேலி செய்யும் நண்பர்கள் வாழ்த்த
கெட்டி மேளங்கள் முழங்க
கூச்சம் என்னை விழுங்க
குங்குமம் என் நெற்றியில் வைக்க
கீதம் என் மனசுக்குள் இசைக்க
கிருஷ்ணன் எனக்கு ராமனாக
காலம் முழுவதும் காதலனாக
கட்ட வேண்டும் தாலி எனக்கு !!!
- க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
