தாராவின் காதல்

இலையுதிர்க்கா கிளையாய்
இருக்கமாய்
நீ இருக்கும் நான்

தீரனே காரனே
என் வாழ்வின் தாரனே
தோகையாய் வந்தாய்
இந்த தாமரையை பறித்தாய்

இளவேனில் விரல்கள்
முதல் பூவை
ஒவ்வொரு இதழாய்
திறப்பது போல்
பூட்டப்பட்ட
இந்தப் பூவையின்
ஒவ்வொரு அறைகளையும்
உன் விழி விரல்கள்
திறந்துப் போனது

மேகம் போலே என்னை
உன் வானம் அள்ளி பூசினாய்
தாகமின்றி குடித்தாய்
என்னை
தயக்கமின்றி குடித்தாய்

வேகமாய் பறந்து வந்து
என் பக்கத்தில் நின்று
என்னை பார்த்து விட்டு
ஏதும் பேசாமல் போகும்
காற்றா நீ

ஓடி வந்து
என் விரல்களின் ஓரம் பார்த்து
வெட்கத்தில் மீண்டும்
தனக்குள்ளேயே திரும்பும்
அலையா நீ

நிலாச் சாரல்
நிலப்பூக்களை
நனைக்கும் நிஜம் போலே
உன் கண் சாரல்
என் உயிர் பூவை
பூக்கச் செய்யும் நிலையை
பாராய்

என் உயிர் கிளி
உன் கூண்டுக்குள்ளே
நிதம் ஒரு சொல் தருகிறாய்
அது எப்படி வாழும்
அதிகம் பேசு
என்னை மூச்சுத் திணற விடு
மூர்ச்சை அடைய தொடு
மோட்சம் எனக்கு அதுவே

ஆற்ற ஒண்ணா
இந்த தனிமை குளிரை
கொளுத்தி எரித்து அணைக்க
அருகில் வாராயோ

என் கண்கள் களவு கொள்ளும்
பெரும்பொழுது காண
என் நினைவுகளின்
தேரை அனுப்புகிறேன்
நீ அதில் ஏறி வா
வருகையில் வழியில்
பூக்களுக்குள்
முக்தி பெற்று கிடக்கும்
வண்டுகளின்
யுக்தியை கற்று வா

எழுதியவர் : Raymond (16-Jun-15, 3:55 am)
பார்வை : 540

மேலே