உன் விரல்களுக்கும் கைகளுக்கும்
நீ இழுத்துவிட்டு
முறைத்துப் பார்க்கவோ
என்ன பேசவென்று
புரியாத கணங்களில் நீ
வருடிக்கொண்டிருக்கவோ
முத்தமிட நெருங்கி பின்
உன் ஏமாற்றும் முயற்சிக்கு
துணையாகவோ
இருந்துவிட்டுப் போகட்டும்
என்பதற்காகவே
உதட்டின் மேல் உன்
விரல்களுக்கு அகப்படவும்
முகத்தின் மேல் உன்
கைகளுக்கு அகப்படவும்..
எளிதாகவே வளர்ந்துவிட்டது
கொஞ்சம் அதிகமாய்
மீசையும் தாடியும்
உன்னை தான் இன்னும்
கண்டுபிடிக்க முடியவில்லை..
--கனா காண்பவன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
