நீயும் மீள்வாய்
மார்கழி பனியும்
பங்குனி வெயிலும்,
பழக கற்றுக்கொள் ..........
இலை உதிர்க்கும் மரங்கள்
அதன் இயலாமையை
உனக்கு சொல்லவில்லை!
மலை உதிர்க்கும் பனிகள்
அதன் சரிவை
உனக்கு சொல்லவில்லை !
கால மாற்றங்களை அவை உணர்த்துகின்றன...
காலத்தின் மருந்துதான்
மரத்தின் மீண்டும் இலைகள்!
மலையில் மீண்டும் பனிகள்!
மனிதா
நீயும் மீள்வாய்
காலம் எனும் மருந்தால் ....................