சிந்திக்க சிலநொடி
ஊழல் அரசியலின் வழக்கு
அதில் நாறுவதோ மக்களின் பொழப்பு..
காந்தி சொன்னதோ அஹிம்சை
அவர்பட கட்டுக்களால் நடக்குது
தினந்தோறும் இங்கே இம்சை..
மரியாதை கொடுக்கும் ஆங்கிலம்
வலித்தால் தாய்மொழியே கூடவரும்..
பெண்ணை மதிக்கா இல்லங்களில்
காவல்தெய்வம் பெண்தெய்வம்..
மண்ணிற்காக உறவுகள் புதைக்கப்படும்
அவையே இறந்தசடலம் தூக்க தேவைப்படும்..
எனவே சிந்தித்து செயல்படுவோம்..
நடக்கக்கூடாதவை நடந்திடும் முன்பு..