இது போதும்

அந்த எதிர்வீட்டுக் காரன்
மகா கர்வி..
தன்னைப் பற்றி ஒருவித
பெருமிதம் என்று கூட
எடுத்துக் கொள்ள முடியவில்லை
என்னால்..
எப்போதும் ..
எப்போதும்..
திமிரான ஒரு பார்வை..
மழை நேரத்தில் கூட ஏ.சி.
போட்டுக் கொண்டு..
சே..சே..
மகா அற்பன் ..
தின்று கொழுத்து..
தன உடம்பையே
சுமையாக தூக்கிக் கொண்டு
சே..சே..
என்னைப் போல் விசுவாசம்
இவனுக்கு கிடையாது..
என்ன செய்வது..
நான் நாட்டு நாய் தான்
இவனைப் போல்
லாப்ரடார் இல்லைதான்..
என்றாலும்..
எனக்கு..
கிடைத்திருக்கும்
இந்த வாழ்க்கையே
பொன்னானது..
எத்தனை நாய்கள்
மழையிலும் வெயிலிலும்
பசியோடு வீதியில்..?

எழுதியவர் : கருணா (16-Jun-15, 4:09 pm)
Tanglish : ithu pothum
பார்வை : 220

மேலே