ஒரு காதல் கவிதை எழுதுங்களேன்

என்னிடம் வார்த்தைகள்
வம்பு பண்ணுகின்றன
அவளை போலவே..

நிறைய சொல்ல வருகிறேன்
வாய் பொத்தி இரசிக்க மட்டுமே
செய்கிறது என்னை..

என் விரல்களை
பிடித்துக்கொண்டு
நகர மறுக்கின்றன ..

நகர்ந்தாலும் சில சமயம்
என்னை பார்த்துக்கொண்டே
தடுக்கிவிழுகின்றன..

பிடித்து தூக்கினால்
என் தீண்டலில்
உறைந்துவிடுகின்றன..

ஆம்
என்னிடம் வார்த்தைகள்
வம்பு பண்ணுகின்றன
அவளை போலவே..

எனக்காக எழுதுங்களேன்
தயவுசெய்து யாரேனும்
ஒரு காதல் கவிதையை..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (16-Jun-15, 10:43 pm)
பார்வை : 172

மேலே